Home /News /entertainment /

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… 31-ம்தேதி படம் ரிலீஸ

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… 31-ம்தேதி படம் ரிலீஸ

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா (Cobra) படத்தில் விக்ரம், இர்பான் பதான் தவிர 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 31-ம்தேதி வெளியாகிறது கோப்ரா.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

    இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெறாததால் வெளியீடு 31-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தனுஷின் திருச்சிற்றம்பலம் ஹீரோயின் ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

    லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக அவர் நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார்.

    ‘பொதுமக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ –வைரலாகும் அஜித்தின் அறிவுரை

    விக்ரம், இர்பான் பதான் தவிர 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் கோப்ரா படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் கோப்ரா படத்திற்கு அளித்துள்ளது. இன்னும் சில நாட்களில் ட்ரெய்லர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கோப்ரா படத்தை தொடர்ந்து  மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் இணையவுள்ளார். அடுத்த மாதம் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ள நிலையில், நேற்று படத்திலிருந்து வெளியான விக்ரம் இடம்பெறும் சோழா சோழா பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cobra Movie

    அடுத்த செய்தி