ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காத்துவாக்குல ரெண்டு காதல் சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன்னிங்டைம் இதுதான்!

காத்துவாக்குல ரெண்டு காதல் சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன்னிங்டைம் இதுதான்!

நாளை மறுதினம் ரிலீஸ் ஆகிறது காத்துவாக்குல ரெண்டு காதல்.

நாளை மறுதினம் ரிலீஸ் ஆகிறது காத்துவாக்குல ரெண்டு காதல்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

நாளை மறுதினம் படம் வெளியாகவுள்ள நிலையில் அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுவென நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடவுள்ளது.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்யும் விஜய் சேதுபதியை நானும் ரவுடிதான் படத்தில் வித்தியாசமாக விக்னேஷ் சிவன் காட்டியிருப்பார். இதன்பின்னர் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படிங்க -  கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு                                        

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இவர்களுடன் பிரபு, பார்த்திபன், ஆர்ஜே. பாலாஜி, மன்சூர் அலி கான், ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க -  சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்! 

அனிருத் இசையில் வெளியான படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. கடந்த சில வாரங்களாக சீரியஸான ஜேனரில் படம் வெளியான நிலையில், காமெடி + ரொமான்டிக் படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகிறது.

இந்நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. மொத்தம் 159 நிமிடங்களுக்கு ஓடக் கூடியதாக காத்துவாக்குல ரெண்டு காதல் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டையொட்டி படத்திற்கான புரொமேஷன் வேலைகளை படக்குழுவினர் தீயாக செய்து வருகின்றனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு  புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

Published by:Musthak
First published:

Tags: Nayanthara, Samantha, Vijay sethupathi