முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Cobra: விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு

Cobra: விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்

யு/ஏ சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், லலித் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் கோப்ரா.  இந்த திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பியது. கோப்ரா படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர்  திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கினர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் படத்தை யுஏ சான்றிதழுக்கு மாற்ற சில காட்சிகளை நீக்கி கொடுப்பதாக கூறினர்.  அதற்கான கோரிக்கையையும் தணிக்கை குழுவிடம் வைத்திருந்தனர். இருந்தாலும் தணிக்கை குழுவினர்,  படத்தில் இடம் பெறும் விக்ரம் கதாபாத்திரத்தின் சாராம்சத்தை சுட்டிக்காட்டி யுஏ சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறிவிட்டனர்.  அதற்கான கடிதத்தையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இருந்தபோதிலும் தயாரிப்பாளர் லலித் குமார் யுஏ சான்றிதழ் வாங்கும் வகையில் படத்தை மாற்ற இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் யு/ஏ சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு
கோப்ரா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். கோப்ரா படத்தின் டிரைலர் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.

First published:

Tags: Actor Vikram, Tamil Cinema