தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் ரீமேக் - தடைபோட்ட சென்சார்

87 தெலுங்கு ரீமேக்

விஜய் ஸ்ரீ-யின் பெயர் தயாரிப்பாளர் என இருப்பதால், ஒன் பை டூ படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  2019-ல் தமிழில் தாதா 87 படம் வெளிவந்தது. சாருஹாசன் நாயகனாக நடித்த இந்தப் படத்தை தெலுங்கில் ஒன் பை டூ என்ற பெயரில் சாய் குமாரை வைத்து ரீமேக் செய்தனர். இந்தப் படத்துக்கு சான்றிதழ்தர சென்சார் மறுப்பு தெரிவித்துள்ளது.

  தாதா 87 படத்தை எழுதி இயக்கியவர் விஜய் ஸ்ரீ. கலைசெல்வனுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். தெலுங்கு நிறுவனம் ஒன்று கலைசெல்வனுடன் ஒப்பந்தம் போட்டு ஒன் பை டூ என்ற பெயரில் தாதா 87 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தது. இதனிடையில் கலைசெல்வன் இறந்து போக, இந்த ரீமேக் விவரம் விஜய் ஸ்ரீக்கு தெரியாமலே போனது. படத்தின் டீஸர் வெளியான பிறகே தனது படத்தை தனக்கே தெரியாமல் ரீமேக் செய்திருப்பதை அறிந்து கொண்டிருக்கிறார்.

  படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது. என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி ரீமேக் செய்ய முடியும் என்று சென்சார் போர்ட் அதிகாரி லீனா மீனாட்சியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

  சென்சார் சான்றிதழில் தயாரிப்பாளர் என விஜய் ஸ்ரீ-யின் பெயர் இடம்பெற்றிருந்தால் ஒன் பை டூ படத்தை தயாரித்தவர்கள் கண்டிப்பாக இவரிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று லீனா மீனாட்சி கூறியுள்ளார். விஜய் ஸ்ரீ-யின் பெயர் தயாரிப்பாளர் என இருப்பதால், ஒன் பை டூ படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சாய்குமாரின் அறிவுரையின் பேரில், ஒன் பை டூ படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது விஜய் ஸ்ரீ-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: