• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Puneeth Rajkumar : ‘இதயம் நொறுங்கியது'..புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்..

Puneeth Rajkumar : ‘இதயம் நொறுங்கியது'..புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்..

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

Puneeth Rajkumar Demise : புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் 1985 ஆம் ஆண்டு ’ பெட்டாடா ஹுவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.பின்பு 2002 ஆம் ஆண்டு’ அப்பு’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் வழங்கியுள்ளார்.

    தற்போது புனித் ராஜ்குமார் ‘ ஜேம்ஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் ‘த்வித்வா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு ஏற்பட்டதால் புனித் ராஜ்குமாருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். இவருக்கு வயது 46. இந்த செய்தி கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    பாலிவுட் நடிகரான சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இதயம் நொறுங்கியது, வி வில் மிஸ் யூ பிரதர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    தெலுங்கு நடிகரான மஞ்சு மனோஜ் குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


    முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்தர் சேவாக் ‘ புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.இவரின் மறைவும் இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு’ என்று பதிவிட்டுள்ளார்.



    நடிகை ஆத்மிகா ‘இது அதிர்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.



    பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பல ரசிகர்களின் மனதை வென்ற ஒரு மிக சிறந்த நடிகரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என்ற கூறியுள்ளார்.



    பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி 'குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் இரங்கல்கள். ஒட்டுமொத்த கன்னட/இந்தியத் திரையுலகத்திற்கே பெரும் இழப்பு. இந்த துயரமான இழப்பைச் சமாளிக்க அனைவருக்கும் வலிமை’ என்று பதிவிட்டுள்ளார்.



    பிரபல நடிகரான பிரத்விராஜ் ‘இது மிகவும் வலிக்கிறது! ரெஸ்ட் இன் பீஸ் சூப்பர் ஸ்டார்! குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த சோகத்தை தாங்கும் சக்தி கிடைக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.



    பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ‘புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். நான் சந்தித்த மற்றும் பழகிய மிகவும் எளிமையான மனிதர்களில் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.



    இரு தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் விருது பெற்றதற்காக புனித் ராஜ்குமார் ட்விட்டரில் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.இன்று காலையில் அவரது அண்ணன் பட வெளியீட்டிற்கும் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: