Karnan Release: பிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன்!

Karnan Release: பிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன்!

கர்ணன்

இன்று வெளியாகியிருக்கும் தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  • Share this:
    இன்று வெளியாகியிருக்கும் தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘கர்ணன்’. தனுஷின் 41-வது திரைப்படமான இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுடன் இணைந்து, ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கண்டா வரசொல்லுங்க’, ‘விட்றாதீங்க யப்போவ்’ உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று வெளியாகியிருக்கும் கர்ணன் படம் எங்கும், பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்திற்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    ’கர்ணன்’ பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து.



    ’கர்ணன்’ சிறப்பான வெற்றி பெற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து.



    தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கர்ணன் படத்துக்கு வாழ்த்து



    மிகவும் எதிர்பார்க்கப்படும் கர்ணன் படத்திற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.









    கர்ணன் படத்துக்கு பரியேறும் பெருமாள் நடிகர், கதிரின் வாழ்த்து.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: