Home /News /entertainment /

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம், ராஜூமேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி

இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம், ராஜூமேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி

பிரதாப் போத்தன் மறைவுக்கு இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம், ராஜூமேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி. 

  • News18
  • Last Updated :
தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம் மற்றும் ராஜு மேனன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் நேரில் அஞ்சலி. 

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலை 8 மணி அளவில் தூக்கத்திலேயே காலமானார். அவரின் உடல் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம், முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம் மற்றும் ராஜூ மேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.

அவர்கள் நீண்ட நேரம் பிரதாப் போத்தன் இல்லத்தில் இருந்து அஞ்சலி செலுத்தினர்.  பிரதாப் போத்தன் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் முத்திரை பதித்தார்.

Also read... நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைப்பு

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா, லக்கி மேன், மை டியர் மார்த்தாண்டம் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Mani rathnam

அடுத்த செய்தி