'என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு பிரபலங்களின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுயதீன கலைஞர்களை ஊக்குவிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘மாஜா’ தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடகர்கள் தீ மற்றும் அறிவு இதனை பாடியுள்ளனர்.
இந்தப் பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் வெகுவாக கொண்டாடி வர்கிறார்கள். குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி பாடலை ஆடி - பாடி குழந்தைகளின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அதோடு அமுல் நிறுவனம், தீ மற்றும் அறிவு இருவரையும் கார்ட்டூனாக சித்தரித்து சிறப்பித்தது. தற்போது வரை ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூ-ட்யூபில் 76 மில்லியன் (7.6 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது!
TikTok Elakkiya: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக் டாக் இலக்கியா கவர்ச்சி நடனம்
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.
நடிகை நஸ்ரியாவின் என்ஜாய் எஞ்சாமி வீடியோ
சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜின் நடனம்
நடிகை ஜனனி ஐயரின் நடனம்
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா
சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா
சின்னத்திரை நடிகை தேவிப்ரியா
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்