சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்! முதலமைச்சர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு
சவுந்தர்யாவின் திருமண விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பிதழ் அளித்திருந்தார்.
news18
Updated: February 11, 2019, 2:33 PM IST
news18
Updated: February 11, 2019, 2:33 PM IST
சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண நிகழ்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், மு.க.அழகிரி உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சவுந்தர்யாவின் திருமண விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பிதழ் அளித்திருந்தார்.
திருமணம் நடைபெறவுள்ள ஹோட்டல்களுக்கு காலையிலேயே திரைப் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் வருகை தந்துவருகின்றனர். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி திருமணத்துக்கு வருகை தந்துள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருமணத்துக்கு வருகை தந்துள்ளார்.
Also see:

Loading...