முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ட்விட்டரில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also read... சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்!

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Ilayaraja