• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • போதைப்பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவேதி வீட்டில் ரெய்டு நடத்தி கைதுசெய்த போலீஸ்..

போதைப்பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவேதி வீட்டில் ரெய்டு நடத்தி கைதுசெய்த போலீஸ்..

நடிகை ராகினி திவேதி

நடிகை ராகினி திவேதி

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    கன்னட திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் குற்றம்சாட்டியதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதைப்பொருளை உபயோகிக்கும் 15 திரைத்துறையினரின் பெயர்களை போலீசில் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    வியாழன் அன்று மீண்டும் இந்திரஜித் லங்கேஷிடம் விசாரணை நடத்திய போலீஸ், நடிகை ராகினி திவேதியையும் விசாரணைக்கு ஆஜாராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவர் தனது வழக்கறிஞர் மூலம் செப்டம்பர் 7-ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்காத போலீசார் அவரை இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்கள். இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே தனக்கும் போதைப்பொருள் விவகாரத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், காவல்துறையினரின் விசாரணையில் இதை நிரூபிப்பேன் என்றும் ராகினி ட்வீட் செய்திருந்தார்.

    இந்நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று காலை பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தார்கள். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ராகினி திவேதியின் நெருங்கிய நண்பர்களான ரவிசங்கர், சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    கன்னட படங்களில் நடித்து வரும் ராகினி திவேதி தமிழில் நிமிர்ந்து நில், அரியான் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: