முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜாதி ரீதியிலான படங்கள் என்பவை இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் சார்ந்தது – நடிகர் ஆர்யா விளக்கம்

ஜாதி ரீதியிலான படங்கள் என்பவை இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் சார்ந்தது – நடிகர் ஆர்யா விளக்கம்

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, அப்போது 100 நாட்களில் கிடைக்கும் வசூல் தற்போது 2 நாட்களிலேயே கிடைத்து விடுகிறது

  • Last Updated :
  • Tirunelveli, India

ஜாதி ரீதியிலான படங்கள் என்பவை இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் சார்ந்தது என்று நடிகர் ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் விரிவான பதில்அளித்துள்ளார்.

நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி  வெளியாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார் நிகழ்ச்சியில் கேப்டன் படத்தின் டிரைலர் ஒளிபரப்பபட்டது.

பின்னர் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது-

கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில படத்திற்கு இணையாக இந்த படம் உருவாகியுள்ளது.

Naane varuven trailer : தனுஷ் - செல்வராகவன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

இது இந்திய சினிமாவில் புது முயற்சியாக இருக்கும். இந்த படம் சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகவும் இருக்கும். அதிக பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. காடுகளில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

குறிப்பாக கேரளா, ஊட்டி மற்றும் நாட்டின் எல்லைகளிலும் அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான சூழலில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்ததால், அதிக நாட்கள் படங்கள் ஓடின.

ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, அப்போது 100 நாட்களில் கிடைக்கும் வசூல் தற்போது 2 நாட்களிலேயே கிடைத்து விடுகிறது என்று தெரிவித்தார்.

' isDesktop="true" id="796053" youtubeid="93Pu7MoKVQk" category="cinema">

தொடர்ந்து அரசியலுக்கு வருவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை என ஆர்யா பதில் அளித்தார். மேலும் அவர் கூறும் போது ‘தமிழகத்தில் ஜாதி ரீதியான திரைப்படங்கள் வெளிவருவது ஒவ்வொரு இயக்குனரின் கற்பனை பொறுத்துதான் அந்த படம் வெளியாகி வருவருகிறது.

வெந்து தணிந்தது காடு ஆடியோ ரிலீஸுக்கு ஹெலிகாப்டரில் வந்தாரா சிம்பு? நடந்த சம்பவம் இதுதான்…

இது இயக்குனர்களின் படைப்பு சுதந்திரத்தை பொறுத்தது. ஏன் இப்படி படம் எடுக்குறீங்க என்று நாம் அவர்களை கேட்க முடியாது. படைப்பாளர்களுக்கு எவ்வளவு தூரம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு சென்சார் போர்டில் அனுமதி அளிக்கிறார்கள்.

top videos

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Actor Arya