இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரிக்கு உதவியதாக மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு

கொடைக்கானல் நகருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்து வந்த உள்ளூர் வாகனத்தினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரிக்கு உதவியதாக மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு
இ பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்குள் நுழைந்த நடிகர்கள் விமல், சூரி
  • Share this:
கொடைக்கானலில் அனுமதியின்றி ஏரியில் மீன்பிடித்தது தொடர்பாக வழக்கில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோரை அழைத்து வந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்று அங்கு மீன் பிடித்தது தொடர்பாக சூரி, விமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் அவர்களை கொடைக்கானலுக்கு அழைத்து வந்த வடகவுஞ்சியை சேர்ந்த கருப்பிச்சிநாதன் என்பவருடைய வாகனமும், அவர்களுக்கு பேரிஜத்தில் இருந்து உணவு கொண்டு சென்ற வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


படிக்க...மருந்தக உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: நடந்தது என்ன? நடவடிக்கை பாயுமா?

மேலும் நடிகர்களின் வாகனம் யார் வீட்டில் நிறுத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் நடிகர்களுக்கு உதவியதாக காதர் பாட்சா என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading