கேரளாவில் விஜய் மீது திடீர் வழக்குப்பதிவு

Sarkar | சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் படத்தை பேனராக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளர், கேரள விநியோகஸ்தர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

கேரளாவில் விஜய் மீது திடீர் வழக்குப்பதிவு
நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: November 15, 2018, 4:02 PM IST
  • Share this:
சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் படத்தை பேனராக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளர், கேரள விநியோகஸ்தர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி அந்த போஸ்டர் சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஆனால் படம் வெளியான சமயத்தில் புகைப்பிடிக்கும் பேனரை ரசிகர்கள் ஒரு சில திரையரங்கில் வைத்திருந்தனர். தமிழகத்தைப் போன்று கேரளாவிலும் ஆங்காங்கே ஒருசில திரையரங்கு வாயில்களில் இந்த பேனர் வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள சுகாதாரத் துறை, நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கேரள விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.


கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

வீட்டில் பச்சைக்கிளி வளர்த்தவருக்கு ₹10,000 அபராதம் - வீடியோ
First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading