• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பிரபல சினிமா இயக்குநர் சங்கரின் மருமகன் ரோகித் உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தை நிறுவியவர் தாமோதரன். அந்த சங்கத்தின் தற்போதைய கேப்டனாக இருப்பவர் தாமோதரனின் மகனான ரோகித். இவர் தான் பிரமாண்ட இயக்குநர் சங்கரின் மருமகன் கிரிக்கெட் சங்கத்திற்கான விளையாட்டுத் திடல் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து மைதானம் அமைக்கப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அப்போதைய துணை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் மைதானம் மூடி சீல் வைக்கப்பட்டது. மைதானம் மூடப்பட்டிருந்த காலத்தில், முத்திரையர்பாளையம் இளங்கோவடிகள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர், தனியார் கிரிக்கெட் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். கொரோனா காலகட்டத்தில் அனைத்துப் பயிற்சி நிலயங்களும் மூடப்பட்ட நிலையில், அந்த சிறுமி பயிற்சிக்காக கிரிக்கெட் சங்கத்தை அணுகியுள்ளார். கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் என்பவர், பயிற்சி அளித்து வந்தார்; அவரிடம் சிறுமி பயிற்சி பெற்று வந்தார். பயிற்சியின்போது, சிறுமியின் அந்தரங்க உடல் பாகங்களைத் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் தாமரைக்கண்ணன். சிறுமியின் எச்சரிக்கைக்குப் பிறகும் அவரது நடவடிக்கைகளில் மாற்றமில்லை

    அதனால், சிறுமி, இன்னொரு பயிற்சியாளர் ஜெயக்குமாரிடம் புகாரளித்துள்ளார்; அவர், தாமரைக்கண்ணனை எச்சரிப்பதாகக் கூறியுள்ளார். அதன்பின்னும் தாமரைக்கண்ணன் தனது போக்கில் மாறாததால், கடந்த ஜூலை மாதம், கிரிக்கெட் சங்க கேப்டன் ரோகித்திடம் புகார் தெரிவித்துள்ளார். அவரோ, சிறுமிதான் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தேர்வு செய்யப்பட்ட போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

    அதிர்ச்சியடைந்த சிறுமி, கிரிக்கெட் சங்க நிறுவனரும், முன்னாள் தலைவரும், ரோகித்தின் தந்தையுமான தாமோதரனைச் சந்தித்து புகாரளித்துள்ளார். அவரும் , சிறுமி அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டு, இந்த விவகாரங்களை வெளியில் சொன்னால் தொடர்ந்து விளையாட முடியாது என்று மிரட்டியும் உள்ளார்.

    இதற்கிடையே, தாமரைக்கண்ணன் சிறுமிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளில், சிறுமியைத் தான் காதலிப்பதாகவும் தனக்கு அவர் இணங்காவிடில் பயிற்சி அளிக்க முடியாது எனவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோரிடம் சிறுமி நடந்ததைக் கூற அவர்கள், கிரிக்கெட் சங்க செயலாளர் சந்துரு, துணைச் செயலாளர் வெங்கட் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், அக்டோபர் 14ம் தேதி தாமரைக் கண்ணன் தனது கர்ப்பிணி மனைவியுடன் சிறுமியின் வீட்டிற்கே சென்று தன் மீது புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்; ஆனால் அதேநேரம் சிறுமியின் வீட்டருகில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அதைப் பார்த்த சிறுமியின் தந்தை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். 2 காவலர்கள் அங்கு சென்றபோது அந்த நபர்கள் அங்கிருந்து மாயமாகி விட்டனர். இதனால் மிகவும் பயந்து போன சிறுமியின் பெற்றோர், குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சிறுமிக்குத் தொந்தரவு கொடுத்ததாக, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீதும், பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் சங்க கேப்டனும் தாமோதரனின் மகனும், இயக்குநர் சங்கரின் மருமகனுமான ரோகித் ஆகியோர் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

    தலைமறைவான தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். திருமணமாகி நான்கே மாதங்களில் இயக்குநர் சங்கரின் மருமகன் ரோகித், சிறுமி பாலியல் வழக்கில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ வில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: