ராஜராஜ சோழன் குறித்து விமர்சனம்! ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை

ராஜராஜ சோழன் குறித்து பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: June 11, 2019, 8:41 PM IST
ராஜராஜ சோழன் குறித்து விமர்சனம்! ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை
ரஞ்சித்
Web Desk | news18
Updated: June 11, 2019, 8:41 PM IST
ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார்.

அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜராஜ சோழனுக்கு எதிராகப் பேசிய ரஞ்சித்தை நெட்டீசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தநிலையில், ராஜராஜ சோழன் குறித்து பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Also see:

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...