மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மாடல் அழகி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மீரா மிதுன்
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 11:17 PM IST
  • Share this:
மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 5 பிரிவுகளின் கீழ் போலீசாரி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் மீதும் தேவையற்ற விமர்சனங்களை மீரா மிதுன் முன்வைத்தார். இதனால் ரசிகர்கள் பலர் மீரா மிதுனை கடுமையாக சாடி வந்தனர்.

இதனிடையே மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மெட்டாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCHEDULE TIME TABLE:

நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மாடல் அழகி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading