கே.ஜி.எஃப் 2 படத்திற்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப். 2 திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 50 நாட்களைக் கடந்த நிலையில் படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ. 1300 கோடியை எட்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மிக அதிகமாக வசூலித்த படங்களில் ரூ. 2 ஆயிரம் கோடியை தாண்டிய அமீர் கானின் தங்கல் படம் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாகுபலி 2 படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் சுமார் ரூ. 1800 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை கேஜிஎஃப் 2 பிடித்துள்ளது.
இதையும் படிங்க - கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தில் சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக ஒவ்வொரு மாஸ் சீனிலும் ஹீரோ யாஷ் சிகரெட் அல்லது மதுபாட்டிலை வைத்திருப்பார்.
இதனை சுட்டிக்காட்டி கேஜிஎஃப் 2 திரைப்படம் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துகிறது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க - தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்
மேலும் கேஜிஎஃப் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ருந்தது. பொது நல வழக்காக தொடரப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே படம் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களை சென்றடைந்து விட்டதால் இதற்கு மேல் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
திரையரங்குகளில் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.