Home /News /entertainment /

மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? விமர்சிக்கும் இயக்குனர் தங்கர் பச்சான்

மாடு பிடி வீரருக்கு கார் பரிசா? விமர்சிக்கும் இயக்குனர் தங்கர் பச்சான்

ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  • Last Updated :
    தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு தமிழக முதல்வர் சார்பாக கார்கள் பரிசாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதனை விமர்சித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான், அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடி கொடுக்காத காளையின் உரிமையாளர்களுக்கும் கார்கள், பைக்குகள், தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறான பரிசுகள் வழங்கப்படுவதை இயக்குனர் தங்கர் பச்சான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.

    Also Read : ஷங்கர் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமை ரூ.200 கோடிகளுக்கு விற்பனை?

    வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.

    ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    Also Read : 'ஜீ தமிழ்' தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜக அரசுக்கு சீமான் கண்டனம்

    காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Jallikattu

    அடுத்த செய்தி