Home /News /entertainment /

‘கேப்டன் மில்லரில் 3 கேரக்டர்களில் தனுஷ்’ – இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சொல்லும் சூப்பர் அப்டேட்

‘கேப்டன் மில்லரில் 3 கேரக்டர்களில் தனுஷ்’ – இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சொல்லும் சூப்பர் அப்டேட்

கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர்

கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர்

Captain Miller Arun Matheswaran : முதலில் படத்தின் கதையை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. பாதி கதை எழுதிய பின்னர்தான் இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.

    தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர்படத்தில் தனுஷ் 3 கேரக்டர்களில் நடிப்பதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். இந்த படம் குறித்த மேலும் சில தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ராக்கி மற்றும் ஜெகமே தந்திரம் படங்களுக்கு ஒளிப்பதிவு மேற்கொண்ட காவ்யா ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    வசனங்களை மதன் கார்கி எழுத, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். விரைவில் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் படம் குறித்த முக்கிய தகவல்களை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

    இது ஒரு ஹீரோவின் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது முந்தைய படங்களைப்போல் கேப்டன் மில்லர் இருக்காது. மாஸ் ஆடியன்சுக்கான கதையாக இந்தப் படம் அமையும்.

    ஆக்சன் அதிகமாக இருக்கும். முதலில் படத்தின் கதையை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. பாதி கதை எழுதிய பின்னர்தான் இதில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். கேப்டன் மில்லரின் 15 ஆண்டுகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும்.

    படத்தில் கேப்டன் மில்லர் உள்பட 3 கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசை பிரமாண்டமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். அதனால்தான் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இடம்பெற்றார்.

    கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழில்தான் எடுக்கப்படும். கேஜிஎஃப். புஷ்பா படங்களைப் போன்று பான் இந்தியா, யூனிவர்சல் ரசிகர்களை ஈர்க்கும் தன்மை கேப்டன் மில்லருக்கு உண்டு.  முதலில் தமிழில படம் எடுக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி