Home /News /entertainment /

தனுஷ் படங்களிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் கேப்டன் மில்லர்!!

தனுஷ் படங்களிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் கேப்டன் மில்லர்!!

கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர்

கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர்

Captain Miller Update : அண்ணன் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவுபெற்று அதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

    தனுஷ் நடித்த படங்களிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படம் தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் - தனுஷ் அடுத்ததாக 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் இணைகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த படம் 1980 களில் நடக்கும் கேங்ஸ்டர் கதை  என்றும், அதன் தலைப்பான மில்லர் படத்தில் தனுஷின் கதாபாத்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் 3 கேரக்டர்களில் நடிக்கிறார்.

    இதையும் படிங்க - மாதவனின் 'ராக்கெட்ரி' படம் எப்படி இருக்கு.?

    மேலும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர்.

    தனுஷின் இதுவரையிலான படங்களிலேயே அதிக பொருட்செலவுப் படமாக கேப்டன் மில்லர் அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் கடைசி இரண்டு படங்களான 'ராக்கி' மற்றும் 'சாணி கயிறு' போல் இல்லாமல், 'கேப்டன் மில்லர்' கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. படப்பிடிப்பு அடுத்த சில வாரங்களில் தொடங்கும். மேலும் இப்படத்திற்காக இந்தியாவில் உள்ள முக்கியமான அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் திட்டமிட்டுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ

    தனுஷ் தற்போது வெங்கி அட்லூரியுடன் 'வாத்தி' படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இதேபோன்று அண்ணன் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவுபெற்று அதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி