சூரரைப்போற்று - உண்மையை சொல்லியிருந்தால் ஆவணப்படமாகி இருக்கும் - ஜி.ஆர்.கோபிநாத்

சூரரைப்போற்று திரைப்படம் கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையை அப்படியே சொல்லியிருந்தால் ஆவணப்படமாகி இருக்கும் என்று ஜி.ஆர்.கோபிநாத் கூறியுள்ளார்.

சூரரைப்போற்று - உண்மையை சொல்லியிருந்தால் ஆவணப்படமாகி இருக்கும் - ஜி.ஆர்.கோபிநாத்
ஜி.ஆர்.கோபிநாத் | சூர்யா
  • Share this:
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தைப் பார்த்த ஜி.ஆர்.கோபிநாத்தும் பாராட்டு தெரிவித்திருந்தார். தற்போது அவரது நண்பர்கள் படத்தைப் பார்த்து விட்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஜி.ஆர்.கோபிநாத் அடுத்தடுத்து விளக்கத்தையும் எழுதியுள்ளார். ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “சூரரைப்போற்று’ திரைப்படம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லவில்லை என்று சில பள்ளி, ராணுவ நண்பர்கள், டெக்கானில் பணியாற்றிய ஊழியர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திரைப்படம் என்பதால் கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மசாலாவுக்குக் கீழ் நல்ல ஆழமான விஷயங்கள் உள்ளததை அவர்களிடம் சொன்னேன். உண்மையை அப்படியே படமாக்கினால் ஆவணப்படமாகி இருக்கும். அதற்கு ஒரு மதிப்புள்ளது. ஆனால் அது வேறு வகையான சினிமா.
ஒரு ஹீரோ துணிச்சல் உடையவராகத் தெரியலாம். ஆனால் அவர்களும் பலவீனமானவர்கள் தான். நாயகர்களுக்கு அவர்களது குடும்பத்திலிருந்து உணர்ச்சி ரீதியில் ஆதரவு தேவை என்பதைக் காட்டுகிறது. ஹீரோவுடன் அவர் டீமில் இருப்பவர்கள் அவரை விட அதிகமாக தியாகம் செய்கின்றனர்.

மேலும் படிக்க: ரீல் இல்ல ரியல் பைலட்... 'சூரரைப் போற்று' படத்தில் வந்த பெண் பைலட் குறித்த சுவாரஸ்ய தகவல்

ஒரு மனைவியால் தனது கனவையும், லட்சியத்தையும் விட்டுக் கொடுக்காமல் கணவரின் லட்சியத்தை பகிர்ந்து கொள்ள முடியும். அபர்ணா மூலமாக இயக்குநர் சுதா அதை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டுச் செல்கிறோனா அப்போதுதான் நான் தோற்றுப்போனவன் என ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் கதை இது. இந்தக் கதையில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்’ இவ்வாறு கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading