Soorarai Pottru | சூரரைப்போற்று படத்திற்கு, ரியல் லைஃப் ஹீரோவான கேப்டன் கோபிநாத்தின் மார்க் எவ்வளவு தெரியுமா?

சூரரை போற்று

படத்தின் நாயகன் சூர்யாவின் நடிப்பு கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. பார்வையாளர்களை அவருடைய தோளில் வைத்து சுமந்து கதைக்குள் கூட்டிச் செல்கிறார் என்று கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
Simply fly நூலின் ஆசிரியரும், Deccan Air விமான நிறுவன அதிபருமான கேப்டன் கோபிநாத் சூரரைப் போற்று படத்தை பார்த்து விட்டு அந்தப் படம் குறித்த அவருடைய பார்வையை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

"சூரரை போற்று படம் அதனுடைய மூல நூலுக்கு நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு படமாகவும் வந்திருக்கிறது.

படத்தின் நாயகன் சூர்யாவின் நடிப்பு கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. பார்வையாளர்களை அவருடைய தோளில் வைத்து சுமந்து கதைக்குள் கூட்டிச் செல்கிறார்.

படம் என்னுடைய வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்து உள்ளது. என் ஆரம்ப கட்ட கஷ்டங்கள், ஒரு சுய தொழில் முனைவோராக நான் சந்தித்த சிரமங்கள் எல்லாம் சிறப்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.
ஒரு பிற்படுத்தப்பட்ட ஏழை இளைஞனின் கனவு மிக தத்ரூபமாக காட்சிப்படுத்த பட்டுள்ளது.

என்னுடைய மனைவியின் பாத்திரத்தை ஏற்றுள்ள, நாயகி அபர்ணா பாலமுரளியின் நடிப்பு அபாரம். அவருடைய பொம்மி கதாபாத்திரம் ஒவ்வொரு பெண்ணுக்குமான வழிகாட்டி.

Also read... சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசை - கலர்ஸ் தமிழுடன் கொண்டாட்டமான தீபாவளி



பொம்மியை போல கணவனுக்கு துணையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம், அவரவர் கனவுகளையும் விடாமல் தொடர வேண்டும்.
பெண்கள் அவர்களுடைய சுயத்தை இழந்து விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் பொம்மி பாத்திரத்தை வடிவமைத்துள்ள இயக்குனர் சுதா கொங்கராவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அவரிடம் சூரரைப் போற்று படத்திற்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு,"5 க்கு 4.5 மதிப்பெண் கொடுப்பேன்" என பெருமையுடன் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: