உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த முறை இந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பை அலங்கரித்துள்ளனர்.
உலக நாயகன் கமல் ஹாசன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பா.ரஞ்சித், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடிகை பூஜா ஹெக்டே இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற கவுனில் கிளாமராக வலம் வந்து ரெட் கார்ப்பெட்டை கவர்ந்திழுத்தார்.
தற்போது அவருக்கு சவால் விடும் விதமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை கலக்கி வரும் நடிகை அதிதி ராவ் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையில் பங்கேற்று அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அதிதி ராவ், பாடகியாகவும் கலக்கி வருகிறார். 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த 'சிருங்காரம்' எனும் திரைப்படம் ஆகும்.
இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அதன் பின்னர் இந்தியில் பிசியாக நடித்து வந்த அதிதி ராவ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 'காற்று வெளியிடை' , செக்கச்சிவந்த வானம்’, ‘சைக்கோ’ என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். சமீபத்தில் ஹே சினாமிகா என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
View this post on Instagram
அதிதி ராவ் கேன்ஸ் திரைப்பட விழா 2022-யில் அழகிய ஐவரி நிற புடவை மற்றும் முழுக்கை ஜாக்கெட் அணிந்து தனது மதிப்புமிக்க தோற்றத்தால் கவனம் ஈர்த்துள்ளார். சனம் ரதன்சி என்ற ஆடை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஐவரி நிற ஆர்கன்சா புடவை மற்றும் முழு கைகளையும் மறைக்க கூடிய ஜாக்கெட் அணிந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சப்யசாச்சி ஜூவல்லரியின் பெங்கால் ராயல் கலெக்ஷனை சேர்ந்த ஒற்றை மரகதம் கொண்ட நெக்லஸ் மற்றும் ஓவர் அலட்டல் இல்லாத அளவான மேக்கப் என சரியானவற்றை தேர்ந்தெடுத்து அசத்தியுள்ளார்.
Read More : இந்தி நடிகைகள் விலகல்… ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் இடம்பெறுகிறாரா சாய் பல்லவி?
பிரபல மொபைல் போன் பிராண்ட்டான விவோவின் பிரதிநிதியாக தான் அதிதி ராவ் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். இது தனது வாழ்வின் ஒரு சிறந்த பகுதி என தெரிவித்துள்ள அதிதி ராவ், "நீங்கள் வளர்ந்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுடன் சந்திக்கும் இடமாக இருப்பதால் இங்கு நான் உற்சாகமாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அழகை பறைசாற்றும் விதமாக அதிதிராவ் சிம்பிள் ப்ளஸ் க்யூட் புடவையில் வந்து அசத்திய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aditi rao