உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழா புதன் கிழமை தொடங்கி வரும் 28 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் 11 இந்திய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க விழாவான சிவப்பு கம்பள வரவேற்பில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்பிரபலங்கள் ஒய்யார நடைபோட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், நடிகைகள் தீபிகா படுகோன், தமன்னா, இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான உள்ளிட்டோர் கான்ஸ் விழாவில் பங்கேற்கின்றனர்.
Cannes 2022: கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் இயக்குநர் பா.ரஞ்சித்!
தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 75 வது கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா முதன்முறையாக கவுரவ நாடு என்ற பெருமையை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். கான்ஸ் விழாவிற்கான போட்டிப் பிரிவின் நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சர்வதேச திரைப் பிரலங்களுடன் இடம்பெற்றுள்ளார். முன்னதாக நடைபெற்ற நடுவர்களுக்கான விருந்து விழாவில் தீபிகா படுகோன் கலந்து கொண்டார். இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் கருப்பு மற்றும் தங்க நிற புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தீபிகாவின் சேலையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யாசாஷி முகர்ஜி (SABYASACHI MUKHERJEE) வடிமைத்திருந்தார். சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் விகரம் படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. நடிகர் மாதவன் தயாரித்து இயக்கிய rocketary the nambi effect, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் "le musk" பார்த்திபனின் இரவின் நிழல் உள்ளிடட படங்கள் திரையிடப்படுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.