ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் ரசிகர்களை வெகுவாக பாராட்டிய கனட மேயர் மரியன் மீட் வார்டு! ஏன் தெரியுமா?

விஜய் ரசிகர்களை வெகுவாக பாராட்டிய கனட மேயர் மரியன் மீட் வார்டு! ஏன் தெரியுமா?

விஜய் - கனடா மேயர்

விஜய் - கனடா மேயர்

விஜய்யின் ‘வாரிசு’ படம் 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டியுள்ளார் கனட மேயர் மரியன் மீட் வார்டு.

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாரிசு' பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. இதற்கிடையே விஜய் ரசிகர்களின் நலப்பணிகளுக்காக கனடா மேயர் மரியன் மீட் வார்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கமும் இது போன்ற நலப்பணிகளை செய்து வருகிறது. இதனால் அங்குள்ள மேயர் விஜய் ரசிகர்களை பாராட்டியுள்ளார்.

கனடிய மேயர் மரியன் மீட் வார்டு, விஜய் மக்கள் இயக்கத்தை வீடியோ மூலம் பாராட்டி, சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய ரசிகர் மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் உருவத்தை பச்சைக் குத்திய விஷால்... அரசியலுக்கு வரும் அறிகுறியா?

இதற்கிடையே விஜய்யின் ‘வாரிசு’ படம் 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். 'தளபதி 67' என்றழைக்கப்படும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில், விஜய் ஒரு கேங்ஸ்டராக நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay