காலில் விழுந்தோ, வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது... ராதரவிக்கு சின்மயி பதில்

காலில் விழுந்தோ, வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது... ராதரவிக்கு சின்மயி பதில்
ராதாரவி - சின்மயி
  • Share this:
ராதாரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சின்மயி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் “டப்பிங் யூனியன் தேர்தல்” ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில்இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியின்றி ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சின்மயி யூனியனில் உறுப்பினராக இல்லை என்றுக் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பொறுப்புகளுக்கன உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், யூனியனை சேர்ந்த 1600 உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். மேலும் மாலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி, டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், யூனியன் நலனுக்காக நலத்திட்ட உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாடகரும், டப்பிங் கலைஞருமான சின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்போம். அவர், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என எச்சரித்தார்.

மேலும் தனக்கு ஆதரவாக பேசிய ஒரே காரணத்தால், பின்னணி பாடகர் மனோ மீது குற்றம்சாட்டி உள்ளார்.சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து அவதூறு பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்“ என்றார்.

ராதாரவியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பாடகி சின்மயி, “ யூனியனில் உறுப்பினராவதற்காக 15,000 செலுத்தி சேர்ந்ததாகவும், ஆனால் தற்போது தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர் கொள்ளப்போவதாக தெரிவித்த அவர், ராதாரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது“ என திட்டவட்டமாக தெரிவித்தார்.

 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்