Home /News /entertainment /

தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதானா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதானா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் - ராஷ்மிகா மந்தனா

விஜய் - ராஷ்மிகா மந்தனா

Thalapathy 66 Title : தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    தளபதி 66 படத்தின் டைட்டில் குறித்து வெளிவரும் தகவல்கள் விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    ரசிகர்கள் எதிர்பார்த்தபடி தளபதி 66படத்தின் டைட்டில் விஜய் பிறந்த நாளையொட்டி வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஹின்ட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது, அறிவிப்பில் He is Returning என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் படத்தில் விஜய்யின் கேரக்டர்தான் டைட்டிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வம்சியின்  முந்தைய படத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இந்த படத்திற்கு மகேஷின் கேரக்டர் பெயரான மகரிஷி என்பதே டைட்டிலாக வைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க -  தெலுங்கு முன்னணி நடிகரை இயக்கப் போகும் வெற்றிமாறன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு 

    தளபதி 66 படத்திற்கு தெலுங்கில் ‘வாரசுடு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இதன் அடிப்படையில், தமிழில் தளபதி 66 படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தப் படம் குடும்பக் கதை என்பதால் வாரிசு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர். அத்துடன் வாரிசு என்பது தமிழ்நாட்டில் நன்கு அறிமுகமான பெயர் என்பதால் இந்தப் பெயரே டைட்டிலாக வைக்கப்பட்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    இதேபோன்று ’வெற்றி’எனவும் டைட்டில் வைக்கப்படலாம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன. தளபதி 66 படத்தின் டைட்டில் வாரிசா, வெற்றியா அல்லது வேறு பெயரா என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும்.

    இதையும் படிங்க - ‘பீஸ்ட் மீம்ஸை பார்த்தேன், படத்தை பார்க்கவில்லை’ – வில்லன் டாம் சாக்கோவின் பேட்டியால் சர்ச்சை

    தளபதி 66 படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    2 பாடல்களுக்கு பிரபுதேவா நடனத்தை வடிவமைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பக் கதையில் விஜய் நடிப்பதால் அவரது ஃபேமிலி ஆடியன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்பில்  இருக்கிறார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி