கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கமல்ஹாசன் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் 2 படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள டாப் ஹீரோக்கள் பார்வை இயக்குனர் பிரசாந்த் நீல் மீது திரும்பியுள்ளது. தங்கல், பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து இந்தியாவில் உருவான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றுள்ளது.
இதன் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் 2 படங்களில் பிஸியாக உள்ளார். முதலாவதாக ஏற்கனவே படப்பிடிப்பில் இருந்த பிரபாஸின் சலார் படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுவென நடத்தி வருகிறார் பிரசாந்த் நீல்.
வயிற்றில் ரத்த கசிவு, அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் - சிம்பு அறிக்கை
இந்த படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31-வது படமாகும். இதற்கு முன்பாக தனது 30-வது படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாலும், தமிழ் உள்பட 5 மொழிகளில் படம் உருவாகி வருகிறது என்பதாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆர்ஆர்ஆர் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பால் ஜூனியர் என்டிஆருக்கு தமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் 31வது படமான பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் கமல்ஹாசனை இடம்பெற வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?
மாஸ் சீன்களை எடுப்பதில் மாஸ்டராக இருக்கும் பிரசாந்த் நீல் படத்தில், உலக நாயகன் கமல் இடம்பெற்றால் சீன்கள் வேற லெவலில் இருக்கும் என கமலின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.