தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ரெடி - ‘ஜகமே தந்திரம்’ டீம் அறிவிப்பு

ஜகமே தந்திரம் பட போஸ்டர்

தீபாவளியை முன்னிட்டு ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • Share this:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இந்தப் படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.



நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. இருப்பினும் புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடல் வீடியோ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிக்பாஸில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதில் நீடிக்கும் மர்மம் என்ன?


‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ரிலீஸ் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமையவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: