Home /News /entertainment /

இணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்!

இணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்!

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  • News18
  • Last Updated :
    அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பிடித்த சண்டைக் காட்சிகளின் உருவாக்க வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியாகியது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார் கமல்.

    Also read... எம்ஜிஆரின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இயக்குநர்

    படம் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல் ஹாசன்.

    மேலும், அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களும், பேக் ரவுண்ட் மியூஸிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.



    இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பிடித்த சண்டைக் காட்சிகளின் உருவாக்க வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இரட்டை சண்டை இயக்குநர்கள் அன்பறிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த காட்சிகளை பதிவிட்டுள்ளனர். கமல்ஹாசன் ஸ்டைலாக நடித்துள்ள காட்சிகளுக்கு பின்னால் ஸ்டன்ட் கலைஞர்களின் திறமையையும் அந்த வீடியோவில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி