முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திரிஷா குந்தவையாக மாறியது இப்படித்தான் - வீடியோ வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு

திரிஷா குந்தவையாக மாறியது இப்படித்தான் - வீடியோ வெளியிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு

திரிஷா

திரிஷா

அதனை திரிஷா வெகு சிறப்பாக கையாண்டிருந்தார். குறிப்பாக அரசவைக்குள் வானதியுடன் நுழைந்து பழுவேட்டரையரே தனது கேள்விகளால் நிலை குலைய செய்த காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து இரண்டாம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கான புரமோஷன்களை படக்குழு துவங்கியுள்ளது.

அந்த வகையில் நடிகை திரிஷாவின் தோற்றம் உட்பட அவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தை லைக்கா நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. நாவலுக்காக வரையப்பட்ட ஓவியங்களில் குந்தவை கதாப்பாத்திரத்தின் தோற்றம், அவரது உடை ஆகியவை எப்படி இருக்கும் என ஆய்வு செய்யப்படுகிறது.

பின்னர் பல்வேறு விதமான உடை, நகைகள், ஹேர் ஸ்டைல் என பல்வேறு தோற்றங்களில் திரிஷாவை புகைப்படம் எடுக்கின்றனர். இறுதியாக தற்போது படத்தில் பார்க்கும் தோற்றம் முடிவு செய்யப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களுக்கு படத்தில் குந்தவை கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் அழகும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கம்பீரமும் நிறைந்த கதாப்பாத்திரம் அது.

அதனை திரிஷா வெகுசிறப்பாக கையாண்டிருந்தார். குறிப்பாக அரசவைக்குள் வானதியுடன் நுழைந்து பழுவேட்டரையரே தனது கேள்விகளால் நிலை குலைய செய்த காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார். பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Ponniyin selvan