மரணம் இன்று வரை மர்மம்....! குங்ஃபூ கலையின் ஜாம்பவான் புரூஸ் லீ நினைவு நாள் இன்று

புரூஸ்லி கதை எழுதி இயக்கிய வே ஆஃப் தி டிராகன் திரைப்படம், அவரது புகழை உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்ஃபூ கலையையும் பிரபலமடைய வைத்தது.

news18
Updated: July 20, 2019, 12:13 PM IST
மரணம் இன்று வரை மர்மம்....! குங்ஃபூ கலையின் ஜாம்பவான் புரூஸ் லீ நினைவு நாள் இன்று
புரூஸ் லீ
news18
Updated: July 20, 2019, 12:13 PM IST
குங்ஃபூ கலையால் உலகையே தன் பக்கம் ஈர்த்த நடிகர் புரூஸ் லீ மறைந்த நாள் இன்று.

குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தாரக மந்திரம் புருஸ் லீ.

சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ, நவம்பர் 27, 1940-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் அசரவைத்தார்.


புரூஸ் லீயின் நுட்பமான வேகம் நிறைந்த சண்டைக் காட்சிகளை எத்தனை பிரேம்கள் வைத்துப் படம் பிடிக்க முயற்சி செய்தாலும் முடியாது திணறியது ஹாலிவுட்.

புரூஸ்லீயின் தந்தை ஒரு நடிகர் என்பதால் புரூஸ்லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே ஆரம்பமானது. தனது 18 வயதிற்குள் பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவரது முதல்படம் 1971-ம் ஆண்டு          தி பிக்பாஸ் என்ற பெயரில் வெளிவந்தது.

புரூஸ் லீயின், குங்ஃபூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த பிஸ்ட் ஆஃப் பியூரி, வே ஆஃப் தி டிராகன், கேம் ஆஃப் டெத் ஆகிய படங்களும் வசூலை வாரி குவித்தன.

Loading...

புரூஸ்லி கதை எழுதி இயக்கிய வே ஆஃப் தி டிராகன் திரைப்படம், அவரது புகழை உலகளவில் கொண்டு சென்றதோடு அவருடன் சேர்ந்து குங்ஃபூ கலையையும் பிரபலமடைய வைத்தது.

கடைசியாக அவர் நடித்த படம் எண்டர் த டிராகன். இப்படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தாலும், அதை பார்க்க புரூஸ் லீ இல்லாமல் போனார். இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீ, பின்னர் நினைவு திரும்பாமலேயே ஹாங்காங்கில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில், தனது 32 வயதில் காலமானார். அவரது மரணம் இன்றுவரை ஒரு மர்மம்தான்.

Also see...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...