பான் இந்தியா திரைப்படங்கள் அதிகரிப்பதால் ரீமேக் கலாச்சாரம் குறையும் என கூறியுள்ள நடிகர் பிருத்வி ராஜ், மோகன்லால் ரோலில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிருத்வி ராஜ் நடித்திருக்கும் கடுவா திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் பிரித்விராஜ், விவேக் ஓபராய் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ் நடிகர்கள் ஆர்யா, ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கடுவா நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய பிரித்விராஜ், மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக கமர்சியல் படங்கள் எடுப்பது குறைந்துவிட்டன. கேரள ரசிகர்கள் ஆக்ஷன் கலந்த கமர்சியல் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால், மற்ற மொழி படங்களில் தான் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. எனவே அந்த வகை படத்தை ஏன் மீண்டும் மலையாளத்திலேயே எடுக்க கூடாது என தோன்றியது. அதன் காரணமாகவே இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!
மேலும் கடுவா திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது எனவும் கூறினார். அப்போது Pan India திரைப்படங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மாநிலங்களில் வெளியிடும் பொழுது ஏதேனும் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா என்ற கேள்வி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பாக முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிருத்வி ராஜ், ஒரு மொழி படத்தை மற்றும் மொழி ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டனர். குறிப்பாக ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாகும்போது அனைத்து இடங்களிலும் அந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. அதற்காக டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக இந்த படங்களை ரசிக்கும் ரசிகர்களை திரையரங்குக்கு வர வைக்க வேண்டிய முயற்சியில் இறங்க வேண்டியுள்ளது. ஒரு மொழி படத்தை மற்ற மாநிலங்களிலும் பார்க்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியது Pan Indian திரைப்படங்கள் அதிகரிப்பதன் காரணமாக, ரீமேக் படங்கள் குறையும் என தெரிவித்தார்.
’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!
ஒரு மொழி படத்தை வேறு மாநிலங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் சில விஷயங்கள் போக போக மாறும் என குறிப்பிட்டார். அத்துடன் கேரளாவில் நேட்டிவிட்டியுடன் கூடிய கதையம்சம் கொண்ட படங்கள் அதிக அளவு வெளிவருகின்றன. அது எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்ற கேள்விக்கு, அவ்வாறு படமெடுப்பது தேவையில்லை. ஒரு இடத்தின் கலாச்சாரம் மற்றும் நேட்டிவிட்டி படமாக்கும் பொழுது, அது இன்னொரு இடத்தில் தொடர்பு இல்லாமல் இருக்கும். எனவே, அனைத்து இடங்களுக்கும் தகுந்தாற்போல கதைகளை எழுத வேண்டும், கதை தான் முக்கியம் என்று பிரித்விராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான Bro Daddy திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால் மோகன் ரோலில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம். அவரிடம் ஏராளமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. நான் ரீமேக் செய்யவில்லை என்றாலும், வேறு யாராவது ரீமேக் செய்து ரஜினிகாந்த் அந்த ரோலில் நடித்தார் என்றால் சிறப்பாக இருக்கும் என கூறினார். இந்த நிகழ்வில் பேசிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், பிரித்விராஜ் மலையாளத்தின் கமல்ஹாசன் என புகழாரம் சூட்டினார். அவரிடம் திறமைகள் இருப்பதாகவும் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood, Mohanlal, Rajinikanth, Tamil Cinema