நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா கல்லூரி வரையில் தானும் தனது சகோதரர்கள் போல் உடையணிந்து, அவர்களைப் போலவே நடந்துக் கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. தற்போது அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யாவின் படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவுக்கு கார்த்தி என்ற தம்பியும் பிருந்தா என்ற தங்கையும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். பிருந்தா சிவக்குமார் பாடகியாக இருக்கிறார்.
Maaran: ஹாட் ஸ்டாரில் வெளியானது தனுஷின் மாறன்!
இந்நிலையில் சிறுவயதில் தனது அண்ணன்களுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்த பிருந்தா, “இது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். எனக்கு எப்போதும் எனது சகோதரர்கள் போல இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடி வளர்க்க பிடிக்காது.
நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...
ஏனென்றால் என் சகோதரர்களிடமிருந்து நான் வித்தியாசமாக தெரிய கூடாது என்பதற்காக. நான் கல்லூரி படிக்கும் வரை என் மூத்த அண்ணனின் சட்டையையும், இளைய அண்ணனின் ஜீன்ஸையும் அணிவேன். இப்பொழுதாவது நான் தான் இளையவள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
மக்கள் என்னிடம் கார்த்தி என் தம்பியா எனக் கேட்பார்கள். இனிமேல் அப்படிக் கேட்காதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு, ’உன்னை விட நான் இளமையாக தெரிவதற்கு, நான் என்ன செய்ய முடியும்’ என பதிலளித்துள்ளார் கார்த்தி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.