• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 6 மொழிகளில் வெளியாகும் எட்டர்னல்ஸ் - புதிய போஸ்டர்கள் வெளியீடு!

6 மொழிகளில் வெளியாகும் எட்டர்னல்ஸ் - புதிய போஸ்டர்கள் வெளியீடு!

எட்டர்னல்ஸ்

எட்டர்னல்ஸ்

நவம்பர் 5 படம் வெளியாகும் நிலையில், நான்கு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மார்வெலின் எட்டர்னல்ஸ் திரைப்படத்தின் நான்கு புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிரபஞ்சத்தை மையப்படுத்தி மார்வெல் இதுவரை 24 சூப்பர் நேச்சுரல் திரைப்படங்களை தயாரித்துள்ளது. மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் திரைப்படங்கள் என இதற்குப் பெயர். இந்த வரிசையில் 25 வது திரைப்படம் எட்டர்னல்ஸ். அக்டோபர் 5 இப்படம் இந்தியாவில் வெளியாகிறது.

ஆசியாவின் முக்கியமான சந்தையாக இந்தியா மாறி வருகிறது. எனினும் சீனா, தென்கொரியாவுடன் ஒப்பிடுகையில் ஹாலிவுட் படங்களை அதிகம் விரும்பாதவர்களாகவே நாம் இருக்கிறோம். அதற்கு காரணம், இங்குள்ள பல நூறு மொழிகள். ஆங்கிலத்தில் மட்டும் ஒரு படம் வெளியாகும் போது குறைவான பார்வையாளர்களே படத்தைப் பார்க்கின்றனர்.



இந்தியும் சேர்த்து எனும் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடும். இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்களை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடுகின்றனர். இதனால் கூடுதல் பார்வையாளர்களை படங்கள் சென்றடைகின்றன. எட்டர்னல்ஸ் திரைப்படத்தை இந்த நான்கு மொழிகளுடன் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகின்றனர்



Also read... யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமளித்த No Time To Die...!



இந்தப் படத்தை Chloé Zhao இயக்கியுள்ளார். 39 வயதான பெண் சீன இயக்குனர் இவர். இதுவரை இரு மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மூன்றாவதாக இயக்கிய Nomadland சிறந்தப் படம், சிறந்த இயக்குனர் என இரு ஆஸ்கர் விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்தது



நவம்பர் 5 படம் வெளியாகும் நிலையில், நான்கு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இந்த வருடத்தின் அனைத்து ஹாலிவுட் படங்களின் வசூலையும் எட்டர்னல்ஸ் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: