Home /News /entertainment /

பிரமாஸ்த்ரா படத்தின் கெசாரியா பாடல் வெளியீடு!

பிரமாஸ்த்ரா படத்தின் கெசாரியா பாடல் வெளியீடு!

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ரன்பீர் கபூர், ஆலியா பட்

300 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரமாஸ்த்ரா படத்தில் இடம்பெற்றுள்ள கெசாரியா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷனுடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற சூப்பர்ஹீரோ திரைப்படத்தை இந்தியில் தயாராக்கியுள்ளது.

    இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரை வைத்து அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

    Also read... இதயத்தை வசம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசை பயணம்!

    3டி, ஐமேக்ஸ் 3டி, 2டி என 3 பார்மெட்களில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனை மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.



    300 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிரமாஸ்த்ரா படத்தில் இடம்பெற்றுள்ள கெசாரியா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Alia Bhatt, Entertainment, Ranbir Kapoor

    அடுத்த செய்தி