Home /News /entertainment /

இந்தியின் பிரமாண்ட படத்தை தமிழகத்தில் வெளியிடும் ராஜமௌலி

இந்தியின் பிரமாண்ட படத்தை தமிழகத்தில் வெளியிடும் ராஜமௌலி

பிரம்மாஸ்திரா

பிரம்மாஸ்திரா

இந்தியில் பிரம்மாஸ்திரா படம் சுமார் 300 கோடிகளில் தயாராகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ராஜமௌலி வெளியிடுகிறார்.

  • News18
  • Last Updated :
பிரம்மாஸ்திரா புராணத்தின் பின்னணியில் தயாராகும் நவீன திரைப்படம். அயன் முகர்ஜி படத்தை இயக்குகிறார். கடந்த 10 வருடங்களாக எனக்குள்ளிருந்த கதை இது. அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் பொழுதுப்போக்குச் சித்திரமாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் கதையை உருவாக்கினேன் என  அவர் தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், அலியா பட், நாகார்ஜுனா இதில் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.

தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

இரு தினங்கள் முன்பு இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து கரண் ஜோஹர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆறு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் தென்னிந்திய வெளியீட்டை ராஜமௌலி பெற்றுள்ளார். அதாவது பிரம்மாஸ்திரத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பதிப்புகளை ராஜமௌலி வாங்கி வெளியிட உள்ளார். அடுத்த வருடம் செப்டம்பர் 9 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Also read... நயன்தாரா, சமந்தா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இந்திப் பதிப்பை வெளியிட்டு பெரும் லாபம் சம்பாதித்தார் கரண் ஜோஹர். இப்போது அவர் தயாரிக்கும் படத்தின் தென்னிந்திய மொழி உரிமைகளை ராஜமௌலி வாங்கியுள்ளார். லாபம் நிச்சயம்தான்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajamouli

அடுத்த செய்தி