ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, அலியாபட் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரம். இந்திய வரலாற்றின் நவீன வடிவமாக அட்வெஞ்சர் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தை செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
நன்மை-தீமை ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் யுத்தமே பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் இந்திய திரை உலகத்தில் முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். அத்துடன் இதில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் நாயகனான ரன்பீர் கபூர் நெருப்பின் சக்தி கொண்ட இளைஞனாக நடித்திருக்கிறார். அவரின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் பிரம்மாஸ்திரம் முதல் பாகத்திற்கான டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.