Home /News /entertainment /

பிரம்மாஸ்திரா-சூப்பர் ஹீரோக்களிடமிருந்து புராணத்துக்கு திரும்பிய ஹாலிவுட் நிறுவனங்கள்..

பிரம்மாஸ்திரா-சூப்பர் ஹீரோக்களிடமிருந்து புராணத்துக்கு திரும்பிய ஹாலிவுட் நிறுவனங்கள்..

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

Brahmastra Movie Ranbir Kapoor : பிரம்மாஸ்திராஆறு மொழிகளில் வெளியாக உள்ளது

ஹாலிவுட்டில் ஸ்பைடர் மேன், பேட் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க் என விதவிதமாக சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கதை பண்ணுகிறார்கள். அப்படியே இந்தியா வந்தால் நமக்கு சக்திமான் போன்ற சில லோக்கல் ஹீரோக்கள் தவிர யாருமில்லை. அதேநேரம் புராணங்கள் இருக்கின்றன. அதில் வரும் கதைகள் சூப்பர் ஹீரோக்களைவிட சாகசமானவை.

ஹாலிவுட் நிறுவனங்கள் , 135 கோடி மக்கள் தொகையை கணக்கில் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பரிட்சயமான புராணங்களை சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் போன்று எடுக்க தீர்மானித்துள்ளன. அதில் முதல் வரவு பிரம்மாஸ்திரா. பிரம்மாஸ்திரம் சிவன் கையிலிருக்கும் ஆயுதம். அனைத்தையும்விட சக்தி வாய்ந்தது. அந்த சிவன் மனித உருவம் எடுத்து அநீதிகளை அழித்தால்...? இந்த கேள்விதான் படத்தின் கதை.
பிரம்மாஸ்திராவை மூன்று பாகங்களாக எடுக்கின்றனர்.

also read : அழகென்றால் அவள் தானா! பிங்க் நிற லெஹங்காவில் மாளவிகா மோகனன்..

ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது. அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அயன் முகர்ஜி இயக்கம். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷனுடன் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. வால்ட் டிஸ்னி படத்தை விநியோகம் செய்கிறது.

also read : நடிகை சாயிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

நேற்று பிரம்மாஸ்திராவின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர் 9 படம் திரைக்கு வருகிறது.மண்டேலா, கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் என சமூகநீதி அரசியல் படங்கள் தமிழில் வெளிவரும் போது தெலுங்கில் அகண்டா, இந்தியில் ஆதிபுருஷ், பிரம்மாஸ்திரா என பக்தியும், புராணமும் கலந்த  படங்கள் தயாராகின்றன. ரசனையின் வேறுபாடா?
-
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bollywood

அடுத்த செய்தி