Boycott Radhika Apte ஏன் ட்ரெண்டாகிறது?

ராதிகா ஆப்தே

கோவிலில் பாலியல் பலாத்காரம் நடந்தால் அதனை கண்டிக்கும் ராதிகா ஆப்தே, தாப்ஸி போன்றவர்கள், மசூதியில் அதுபோன்ற சம்பவம் நடந்தால் வாய்மூடி மவுனம் காக்கின்றனர் என்று பெரும்பாலானவர்கள் வசைபாடியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்று திடீரென பாய்காட் ராதிகா ஆப்தே ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. புதிதாக ஏதாவது காரணமா என்றால் இல்லை. எல்லாம் பழைய பகை.

உத்திரபிரதேசத்தில் ஒரு முஸ்லீம் ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி அவரது மகளின் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதை திசைதிருப்ப சிலர் பாய்காட் ராதிகா ஆப்தேயை கையில் எடுத்துள்ளனர். ராஜ்குந்த்ரா போர்னோகிராபி தயாரித்தது குறித்து ராதிகா ஆப்தே எதுவும் கூறவில்லை என்பதே குற்றச்சாட்டு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



கோவிலில் பாலியல் பலாத்காரம் நடந்தால் அதனை கண்டிக்கும் ராதிகா ஆப்தே, தாப்ஸி போன்றவர்கள், மசூதியில் அதுபோன்ற சம்பவம் நடந்தால் வாய்மூடி மவுனம் காக்கின்றனர் என்று பெரும்பாலானவர்கள் வசைபாடியுள்ளனர். கோயிலில் நடப்பதைப் பற்றியும் நீ கேட்காதே என்ற தொனியே அதில் மேலோங்கி உள்ளது. பாலியல் வன்முறை எங்கு நடந்தாலும் தவறு என்ற பார்வை ஒருவரிடமும் இல்லை. என்பதே பரிதாபம் மற்றும் கவலையளிக்கும் விஷயம்.



அத்துடன் ராதிகா ஆப்தே முன்பு நடித்த படங்களின் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து, இந்திய கலாச்சாரத்தை ராதிகா ஆப்தே கெடுக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். நடிகைகளின் உடைகளில் இந்தியாவின் ஈராயிர வருட பாரம்பரியம் முடிந்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பும் மூடத்தனமே அன்றி இது வேறில்லை

Also read... சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?

மதவெறுப்பின் இன்னொரு வடிவமே பாய்காட் ராதிகா ஆப்தே ஹேஷ்டேகின் காரணம் என்பது உள்ளேயுள்ள சில பதிவுகளை படித்தாலே தெரிந்துவிடும்
Published by:Vinothini Aandisamy
First published: