பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இருப்பினும் இதுவரை இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைத்துள்ளது என்ற போட்டி ரசிகர்களிடையே நிலவுகிறது. முதல் நாளில் தமிழ் நாட்டில் துணிவு படம் வசூலில் முதலிடத்திலும் அதற்கு அடுத்த நாட்களில் வாரிசு முதலிடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரண்டு தரப்பு தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வசூல் விவரங்களை வெளியிடவில்லை.
அதன் ஒரு பகுதியாக வாரிசு படக்குழு பொங்கல் வின்னர் என போஸ்டர் வெளியிட அதற்கு பதிலடி தரும்விதமாக துணிவு படக்குழுவினர் ரியல் வின்னர் என போஸ்டர் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமையும் என்பது விநியோகிஸ்தர்களின் கருத்தாக இருந்துவருகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு படத்திலிருந்து அறுவடை திருநாள் வாழ்த்துகள் என்ற போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். இந்தப் படத்தில் அஜித் குமாருடன், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பக்ஸ், ஜான் கொக்கேன், பால சரவணன், தர்ஷன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையில் இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அறுவடை நாள் வாழ்த்துக்கள் ✨
Harvest Day wishes to all of you. ✨#ThuvinuPongal #HugeWorldwideBlockBuster#NoGutNoGlory #AjithKumar #Ak #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa pic.twitter.com/j0FI4aKAkj
— Boney Kapoor (@BoneyKapoor) January 15, 2023
துணிவு திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Thunivu