வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்திய நேர்க்காணலில் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்டிருந்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் முடிந்துவிட்டது. இப்போது ஸ்பெயினில் சண்டைக் காட்சிகளை படமாக்க குழு காத்திருக்கிறது. இதற்கிடையே அஜித்தின் 'வலிமை' கடினமான அதிரடி சண்டை காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலிடம் தெரிவித்தார். அதோடு 'வலிமை' நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Suriya-Karthi: பிரபல படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் சூர்யா-கார்த்தி?
படத்தின் விளம்பரத்தைப் பற்றி முன்னரே ட்விட்டரில் தெரிவித்திருந்தார் போனி கபூர். அதன்படி, படத்திற்கான விரிவான விளம்பரங்கள் அஜித்தின் 50-வது பிறந்தநாளிலிருந்து தொடங்கும் எனத் தெரிகிறது. அதனால், அஜித் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் அந்த சிறப்பு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 வருடங்களுக்குப் பிறகு தங்கச்சி பாப்பா பிறந்த மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை!
வலிமை படத்தில் கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதே நேரத்தில் சில நடிகர்களின் பெயர்களை தயாரிப்பாளர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவை கையாள்வது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்