அஜித் 60: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

news18
Updated: July 29, 2019, 8:38 PM IST
அஜித் 60: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
அஜித்
news18
Updated: July 29, 2019, 8:38 PM IST
அஜித் நடிக்கும் அவரது 60-வது படம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகுன் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித் நடிக்கும் 60-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது பட பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும்” என்று கூறியுள்ளார்.


முன்னதாக படம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த போனி கபூர், “தல 60 படத்தில் அஜித், அஜித்தாகவே இருப்பார். படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்த அனைத்தும் இருக்கும்” என்றும் கூறியிருந்தார்.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...