முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் அஜித்தின் துணிவு - ஓடிடி வெளியீடு குறித்து அறிவித்த போனி கபூர்

நடிகர் அஜித்தின் துணிவு - ஓடிடி வெளியீடு குறித்து அறிவித்த போனி கபூர்

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

இதனையடுத்து ரியல் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்துகொண்டிருக்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக துணிவு படத்தின் ப்ரமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இருப்பினும் இதுவரை இரண்டு படங்களுக்கும் நல்ல வசூல் கிடைத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தப் படத்துக்கு அதிக வசூல் கிடைத்துள்ளது என்ற போட்டி ரசிகர்களிடையே நிலவுகிறது. முதல் நாளில் தமிழ் நாட்டில் துணிவு படம் வசூலில் முதலிடத்திலும் அதற்கு அடுத்த நாட்களில் வாரிசு முதலிடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரண்டு தரப்பு தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வசூல் விவரங்களை வெளியிடவில்லை.

அதன் ஒரு பகுதியாக வாரிசு படக்குழு பொங்கல் வின்னர் என போஸ்டர் வெளியிட அதற்கு பதிலடி தரும்விதமாக துணிவு படக்குழுவினர் ரியல் வின்னர் என போஸ்டர் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமையும் என்பது விநியோகிஸ்தர்களின் கருத்தாக இருந்துவருகிறது.

இந்த நிலையில் வாரிசு படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து ரியல் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்துகொண்டிருக்கின்றனர்

முன்னதாக துணிவு படத்தின் ப்ரமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார். 'நீங்க ஸ்டன் ஆகிற மாதிரி ஒரு ஃபிளாஸ்பேக் சொல்றேன்' என்று அஜித் பேசும் காட்சியின் ப்ரமோவை வீடியோவை பகிர்ந்து, உலக அளவில் மிகப்பெரிய வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால் போனி கபூர் ட்விட்டர் பதிவில் நெட்ஃபிளிக்ஸையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாவதை அவர் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Thunivu