வலிமை படத்தின் ஷூட்டிங் நிலவரம் - போனி கபூர் கொடுத்த புதிய அப்டேட்

வலிமை படத்தின் ஷூட்டிங் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தகவல் தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தின் ஷூட்டிங் நிலவரம் - போனி கபூர் கொடுத்த புதிய அப்டேட்
தயாரிப்பாளர் போனி கபூர்
  • Share this:
வலிமை படத்தின் ஷூட்டிங் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தகவல் தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி அஜித்தின் 60-வது படத்திலும் தொடர்கிறது. வலிமை என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில் கடந்த மே 11-ம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சில திரைப்படங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி வலிமை படத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் என்று அஜித் தயாரிப்பாளர் போனி கபூருக்கு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அஜித்தின் இந்த முடிவுக்கு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவில்லை என்றே தெரிகிறது.


இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் 50% நிறைவடைந்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: டிவி சீரியல்கள் தொடங்கப்பட்ட போது எழுந்த அதே அச்சம்...! OTT ரிலீசால் தனித்துவம் இழக்குமா தியேட்டர்கள்?

பார்க்க: நாடோடிகள் பட அனன்யா - ரீசென்ட் கிளிக்ஸ்
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading