ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் ‘ஏகே 61’ அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்… எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் நடைபெறும் ஷூட்டிங்

அஜித்தின் ‘ஏகே 61’ அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்… எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் நடைபெறும் ஷூட்டிங்

போனி கபூர்

போனி கபூர்

ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித்தின் ஏ.கே. 61 படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காவிட்டாலும், அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு மட்டும் வலிமை படம் நிறைவேற்றியது. இதனால் போனி கபூர், அஜித், எச். வினோத் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் ஏகே 61 படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், வலிமை படம் கலவை விமர்சனங்களை ஏற்படுத்தியால், ஏகே 21 படத்தை மிக தரமாக உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் படக்குழுவுக்கு உருவாகியுள்ளது.

வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததால், படத்தின் வேகம் குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற நெகடிவ் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளப்பட்டு மிக நேர்த்தியாக படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க - யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்த ‘விக்ரம்’ ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

இந்நிலையில் இணையம் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் போனி கபூர், ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்று விடும் என்றும் தற்போது வரையில் மொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்பின்னர் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நிறைவு பெற்று தீபாவளிக்கு ஏகே 61 படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - விக்ரம் ட்ரெய்லரில் மிஸ் ஆனாரா சூர்யா? அப்போ இந்த கேரக்டர் யார்?

வங்கிக் கொள்ளை, மோசடியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படத்தில் கவனம் ஈர்த்த மஞ்சு வாரியர் நடிக்கிறார். உடன் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அஜித்தின் பிறந்த நாளான கடந்த 1ம் தேதி ஏகே 61 படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தகவல்கள் பரவின. ஆனால், படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Actor Ajith, Boney Kapoor