லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என தயாரிப்பாளர் போனி கபூர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
லவ் டுடே (2022) படத்தின் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளதாகவும், அதை இந்தியில் வருண் தவானை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அதோடு இந்தப் படத்தை டேவிட் தவான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த வதந்திகளை போனி கபூர் மறுத்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரொமாண்டிக் காமெடி படமாக வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு அஜித்குமாருடன் போனி கபூர் இணைந்துள்ள மூன்றாவது படமான துணிவு படத்தின் வெளியீட்டில் அவர் தற்போது பிஸியாக உள்ளார். இதற்கிடையே லவ் டுடே படத்தை ரீமேக் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது அந்த செய்தியை அவர் நிராகரித்துள்ளார். அத்தகைய செய்திகள் அனைத்தும் 'ஆதாரமற்றவை' மற்றும் 'போலி' என்று அவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
”லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை” என இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Please note that I have NOT acquired the remake rights of Love Today. All such reports on social media are baseless and fake.
— Boney Kapoor (@BoneyKapoor) January 2, 2023
வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் மனைவி சங்கீதா ஏன் கலந்துக் கொள்ளவில்லை தெரியுமா?
துணிவு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் போனி கபூர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. அதோடு பாக்ஸ் ஆபிஸில் விஜய் நடித்த வாரிசு படத்துடன் மோதுகிறது. துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bollywood, Boney Kapoor, Tamil Cinema