• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’தல 61 படத்துக்காக மீண்டும் அஜித்துடன் இணைகிறேன்’ உறுதிப்படுத்திய போனி கபூர்

’தல 61 படத்துக்காக மீண்டும் அஜித்துடன் இணைகிறேன்’ உறுதிப்படுத்திய போனி கபூர்

போனி கபூர் - அஜித்

போனி கபூர் - அஜித்

அஜித் மற்றும் அவரது ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட போனி, மூன்றாவது முறையாக அவருடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

  • Share this:
    அஜித்தின் அடுத்தப் படத்தையும் தானே தயாரிப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

    பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பிங்க்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அறிமுகப் படத்திற்கு பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு, அதே நடிகர் மற்றும் இயக்குநருடன் இரண்டாவது முறையாக 'வலிமை' படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார்.

    இந்தப் படம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அஜித் மற்றும் ஹெச்.வினோத் ஆகியோருடன் தனது மூன்றாவது கூட்டணியாக 'தல 61' படத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அஜித் மற்றும் அவரது ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட போனி, மூன்றாவது முறையாக அவருடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

    வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இதன் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை மீண்டும் உறுதிப்படுத்திய போனி கபூர், மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலும், வலிமை பொங்கல் வெளியீட்டில் இருந்து பின் வாங்காது எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: