Home /News /entertainment /

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

யோகி பாபு

யோகி பாபு

இந்தப் படம் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மகளுக்கு நீதிகேட்டு போராடும் தந்தையை மையப்படுத்தியது என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பொம்மை நாயகி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படம் இயக்குவதுடன் விளம்புநிலை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் திரைப்படங்களை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார் ரஞ்சித். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு, ரைட்டர் படங்களைத் தொடர்ந்து யோகி பாபு நாயகனாக நடிக்க ஒரு படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. ஷான் எழுதி இயக்கிய இந்தப் படத்துக்கு பொம்மை நாயகி என பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படம் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மகளுக்கு நீதிகேட்டு போராடும் தந்தையை மையப்படுத்தியது என கூறப்படுகிறது. சமூக நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சாதி, மத, அரசு வன்முறைகளை விமர்சனம் செய்து தமிழில் அதிகளவில் படங்கள் தயாராகின்றன. ஜெய் பீம் அதில் ஒன்று. அந்தத் தடத்தில் இந்த பொம்மை நாயகியும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - தனுஷ் நடிக்க வேண்டிய கதையில் சிவகார்த்திகேயன்?

pa ranjith, pa ranjith movie, bommai nayagi, yogi babu movie, யோகி பாபு, பொம்மை நாயகி, பா ரஞ்சித்

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து ரைட்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. தணிக்கை செய்யப்பட்ட அந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இவை தவிர மேலும் இரு படங்களை ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Pa. ranjith

அடுத்த செய்தி